காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்ற நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசினார். இதற்கு பாஜக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேச துரோகம் குற்றத்தை ராகுல் காந்தி புரிந்து வருவதாக விமர்சித்து வருகிறார்கள். இதேபோன்று பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவும் தேச துரோகி என்ற ராகுல் காந்தியை விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது பெரம்பலூர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுரேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு ராகுல் காந்தியை தேசத்துரோகி என்று விமர்சித்த எச். ராஜாவின் நாக்கை வெட்டினால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறினார்.

அதேபோன்று சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்குவாட் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் சன்மானம் தருவதாக கூறினார். இதனால் சஞ்சய் நாக்கை பார்ப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தருவதாகவும் சுரேஷ் கூறினார். அதாவது ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசுபவர்கள் மீது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சுரேஷ் புகார் கொடுத்த பிறகு இப்படி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாக தாகும். மேலும் சுரேஷ் பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.