கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் அவரை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தங்க கடத்தல் வழக்கில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவருக்கு உதவியாக இருந்த சாகில் ஜெயின் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையில் அடிக்கடி பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு தகவலை என்டிடிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது ரன்யா ராவ் ரூ. 30 கோடிக்கு மேலான கருப்பு பணம் பதுக்கியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்திய நிலையில் துபாய் மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கு 38 கோடி மதிப்பிற்கும் மேலான கருப்பு பணத்தை சாஹில் உதவியுடன் கடத்தியுள்ளார். அவ்வாறு உதவிய சாஹில் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ. 55 ஆயிரம் கமிஷன் பெற்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.