
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது டெல்டா விவசாயிகளே மனதில் வைத்துக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் என அறிவித்தது மட்டுமல்ல. வறட்சி – புயல் – வெள்ளம் வந்தபோது 2268 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் கொடுக்காத அளவிற்கு… இந்தியாவிலேயே அதிகபட்சமாக… உச்சபட்சமாக…. 9,600 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை கொடுத்தது எடப்பாடியார் அவர்கள்…. இன்றைக்கு குறுவைக்கு நீரும் இல்லை, தண்ணீரும் இல்லை. கேட்டு பெறக்கூடிய திராணியும் இல்லை.
அம்மா அவர்கள் கெஜட்டில் வெளியிட்ட இறையாண்மையை…. அதற்கு பின்னால் எடப்பாடியார் பெற்றுக் கொடுத்த அந்த ஆணையத்தின் படி… நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம். நடைமுறைப்படுத்துவதில் தாமதம். நடைமுறைப்படுத்துவதில் சுனக்கம்.
கேட்டு பெற முடியாத திராணியற்ற அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிறது என்பதுதான் மிக வருத்தமான செய்தி. அதைத்தான் இன்றைக்கு விவசாயிகள் போர்கொடி தூக்கி இருக்கின்றார்கள். குறுவை இன்றைக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சம்பாவுக்கு திட்டமிடப்படவில்லை என அழகா சொல்லியிருக்கிறார், இதுதான் மெயின் பாயிண்ட். அரசு கர்நாடகா அரசுல…. இந்திய இறையாண்மையில் ஏற்கனவே வகுத்த… திட்டமிட்ட…. அம்மா ஆட்சியில் பெறப்பட்ட விஷயத்தை நடைமுறைப்படுத்துவது கூட முடியல என்பது தான் எங்களுடைய கேள்வி என தெரிவித்தார்.