
ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையான போர் தொடங்கியது. இந்த போரில் ராணுவ வீரர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யாவுக்காக தங்களது இன்னல்களை பொறுத்துக்கொண்டு போராடிய 70,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உக்கிரைனில் தங்கள் உயிரை பறிக்கொடுத்தனர். இந்த போரில் உயிரிழந்தவர்களின் பெயர்கள், அஞ்சலி செய்திகள், அவர்களின் இறுதி சடங்கு படங்கள் போன்றவற்றை ரஷ்ய ஊடகங்களிலும் சமூக வலைதளத்திலும் வெளியிடப்பட்டு வருகிறது.
அனைத்து மீடியாக்களும் போரின் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வெளியிடும் அறிக்கைகளையும் பதிவு செய்து வருகின்றது. மேலும் அவர்கள் கல்லறையில் பிரத்தியோக கொடிகள் இருப்பதை வைத்தும் அவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். நோட்டா அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.