
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு நடிகர் பொன்னம்பலம் அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் போது நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தையும் இயக்குனரும் ஆகிய எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோருக்கு இடையே படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அதாவது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரப்பாண்டி என்ற படத்தில் விஜய் நடிக்கும் போது சிறு சிறு தவறுகளை செய்துள்ளார். அது ஆரம்ப காலம் என்பதால் நடிகர் விஜய் சிறுசிறு தவறுகளை செய்துள்ளார்.
இதனால் படப்பிடிப்பில் கடுப்பான எஸ்ஏ சந்திரசேகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகர் விஜய்யை அடித்துள்ளார். இதைப்பார்த்து படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். உடனே பொன்னம்பலம் ஓடி சென்று எஸ்ஏ சந்திரசேகரிடம் இப்படி அனைவரின் முன்பாகவும் விஜயை அடிக்கலாமா என கேட்டுள்ளார். அதோடு நடிகர் விஜய் இப்போது உங்கள் மகன் கிடையாது எனவும் படத்தின் ஹீரோ எனவும் பொன்னம்பலம் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகர் விஜயுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ள பொன்னம்பலம் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நடிகர் விஜய் ஒரு போன் செய்து எப்படி இருக்கிறாய் என்று கூட கேட்கவில்லை என ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் நடிகர் விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகருக்கு இடையே நடந்த பிரச்சனை குறித்து பொன்னம்பலம் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.