
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் சென்ற 14-ம் தேதி வெளியான படம் “சாகுந்தலம்”. இந்த படம் முதல் நாளில் ரூ.5 கோடி வரை தான் வசூல் செய்து இருந்தது. இதன் காரணமாக சாகுந்தலம் படம் நஷ்டத்தை நோக்கி போகிறதா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிரபல விமர்சகரும் வெளிநாட்டு சென்சார் குழு உறுப்பினருமான உமைர் சந்து சமந்தாவின் சாகுந்தலம் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதாவது, சாகுந்தலம் டிசாஸ்டர் தோல்வி எனவும் படத்தின் தோல்வி காரணமாக சமந்தா மன வருத்தத்தில் உள்ளார் எனவும் கூறி இருக்கிறார். அதோடு சாகுந்தலம் தோல்வி காரணமாக சமந்தாவின் மார்க்கெட் குறைந்துவிட்டது. நடிகர், நடிகைகள் மற்றும் படங்கள் பற்றி சர்ச்சையளிக்கும் விதமாக உமைர் சந்து பதிவு வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SamanthaRuthPrabhu is in severe depression after Disaster Result of #Shaakuntalam. She switched her phone since yesterday. Her brand & market value is also DOWN in just one day. pic.twitter.com/xsnKvA6OzD
— Umair Sandhu (@UmairSandu) April 16, 2023