சாலை விபத்தில் உயிரிழந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப் உடலுக்கு எம்பி தமிழச்சி பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது எம்பி தமிழச்சி பாண்டியன் கதறி அழுதார்.

பல கனவுகளோடு வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்நோக்கி கொண்டிருந்த ஒருவர், திடீரென உயிரிழந்தது மிகவும் வேதனையை அளிக்கிறது என எம்பி தமிழச்சி பாண்டியன் தெரிவித்தார். திமுகவின் முக்கிய அங்கமாக இருந்து வந்த ஜேக்கப்பின் இறப்பிற்கு தமிழகம் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.