
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் சாய் பல்லவி விளங்குகின்றார். இதில் ‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலையில் பிரபலமான இவர் ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இதில் மருத்துவ படிப்பு படித்துவிட்டு நடிப்பு, நடனம் என அனைத்திலும் மிக சிறப்பாக பணியாற்றி வரும் சாய் பல்லவி அடுத்தடுத்து தமிழில் மாரி 2, என்,ஜி,கே போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்ததோடு பல ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்துள்ளார்.
தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 31 அதாவது அன்று ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் கேரக்டர் வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு கலந்துகொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பேட்டி ஒன்றில் சாய்பல்லவி கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் இருப்பினும் என் குடும்பத்தை பணக்கார குடும்பம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு முக்கிய காரணம் மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு எங்களிடம் பணம் இருந்தது. தற்போது தேவை உள்ளவர்களுக்கு உதவும் அளவிற்கு பணம் உள்ளது. அதை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.