
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குழந்தை ஜோதிடர் என்ற கதாபாத்திரத்தில் பட்டுக்கோட்டை ராமமூர்த்தி நடித்திருந்தார். படத்தின் நீலம் கருதி அவரின் காட்சியை படக்குழு நீக்கிவிட்டது. இதனை பட்டுக்கோட்டை ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு லைக்கா நிறுவனம் சம்பளம் வழங்கியிருப்பதாகவும் அத்துடன் பதிவிட்டு இருக்கின்றார்.
முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்ததாகவும் படத்தின் நீளம் கருதி காட்சி நீக்கப்பட்டதாகவும் தனக்கு சம்பளம் வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு லைக்கா நிறுவனம் சம்பளம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் முகமலர்ச்சியுடன் லைக்கா நிறுவனம் தனக்கு சம்பளம் வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.