
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளி காட்டில் புகழ் பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஜோதி என்பவர் செயல்நிலை அதிகாரியாக இருக்கிறார். இங்கு சசிகுமார் என்பவர் எழுத்தராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு கடந்த 10 வருடங்களாக சம்பள உயர்வு தொகை என்பது நிலுவையில் இருந்து கொண்டே வருகிறது.
இதனால் சசிகுமார் ஜோதிடம் நிலுவை தொகையை வழங்கும் படி கேட்டுள்ளார். அதற்கு ஜோதி அந்த பணத்தை வழங்க வேண்டும் என்றால் 1 லட்ச ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று சசிகுமாரிடம் கூறினார். அதனை கேட்ட சசிகுமாருக்கு மிகுந்த மன வேதனையை ஏற்பட்ட நிலையில் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. எனவே அவர் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாயை சசிக்குமாரிடம் கொடுத்து ஜோதியிடம் கொடுக்கும்படி அனுப்பி வைத்தனர்.
அதன்படி நேற்று கோவிலில் இருந்த ஜோதியிடம் சசிகுமார் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக ஜோதியை கைது செய்தனர். மேலும் ஜோதியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளார்.