
செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், தனி நபர் ஆணையம் அமைத்து எதுவுமே நடவடிக்கை இல்லையே. நடவடிக்கையே இல்லையே . அப்பறோம் ஏன் தெண்டத்துக்கு கமிஷன போட்டு, 5 கோடி ரூபாய், 10 கோடி சம்பளம் போடுகிறீர்கள். இதுக்கு இதனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தோம்னு வேற போடுறீங்க.
கமிஷன் என்பது கண்தொடைப்பா ? அல்ல நியாயம் செய்வதற்காகவா ? என்பதுதான் அரசை கேட்கிறேன்… முதலமைச்சரை கேட்கிறேன். அதே மாதிரி தான் இப்ப மாண்புமிகு சந்துரு அவர்களை போட்டு இருக்கீங்க. அந்த கமிஷன் என்பது மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு பிழைப்பு.
வேலைவாய்ப்பு எத்தனை பேருக்கு கொடுத்து இருக்கீங்க ? அதை நீங்க சொல்ல சொல்லுங்க. நாங்க இவ்வளவு கமிஷன் போட்டு இருக்கிறோம். திமுக இருக்கட்டும், அண்ணா திமுக இருக்கட்டும் கமிஷன் போட்டு… இதுவரைக்கும் மக்களுக்கு செய்த நன்மைகளை அவர்களை வெள்ளை அறிக்கையில் வெளியிடச் சொல்லுங்க, நான் நம்புறேன்.
அவுங்களை ஏதாவது ஒன்னு சொல்ல சொல்லுங்க. அவங்க சொல்லனும்ல… நாங்க கமிஷன் போட்டதுனால, இது நன்மை – இந்த மக்களுக்கு இவ்வளவு நன்மை கிடைக்கிறது, மாணவர்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது, மாணவிகளுக்கு நன்மை கிடைத்திருக்கிறது என எதையாவது முதலமைச்சரை சொல்ல சொல்லுங்க என தெரிவித்தார்.