
பெங்களூருவை சேர்ந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் தம்பதியினர் சமோசா விற்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். வழக்கத்தில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பிய இந்த தம்பதியினர், கடந்த 2015 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு அடுத்த ஆண்டே “சமோசா சிங்” என்ற உணவகத்தை தொடங்கினர்.
இந்த உணவகம் முதலில் பெங்களூரில் துவங்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் 40 கடைகள் இருக்கும் அளவுக்கு தம்பதியினர் உயர்ந்துள்ளனர். இவர்கள் நாளொன்றுக்கு ரூபாய்.12 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் இந்த தம்பதியினரின் விடா முயற்சியானது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.