
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கக்கூடிய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் “தலைக்கூத்தல்” திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
இப்படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலைக்கூத்தல் படம் வரும் பிப்,.3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ ‘தலைகூத்தல்’முன்னோட்டம்https://t.co/vfLV1iHXra
Theatrical Release on Feb 3.@jp.lens @thondankani @kathir_l @ivasuuu @katha_nandi @sash041075 @chakdyn @martindon @micheal_artdirctor @Kannannarayanan5 @danivcharles @subhaskaar @suhasinisanjeev @a_r_rajesh_ @sumesh_shiva pic.twitter.com/VR1BCwyeGl
— P.samuthirakani (@thondankani) January 26, 2023