
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சனாதன தர்மத்தை பற்றி….. சனாதனம்னா என்னன்னு தெரியாத முட்டாள்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தெரிந்த அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருக்குற டாக்டர் கரன்சிங். திரிணமூல் காங்கிரஸினுடைய மம்தா பானர்ஜி, சிவசேனாவினுடைய உத்தவ் தாக்கரே. இவங்க எல்லாருமே உதயநிதி மாதிரியா… அரைகுறை விடலைகள் பேசினால் இந்தியா கூட்டணி எப்படி சிதறி போகும் அப்படினு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியும் அப்படினு அவசியம் இல்ல.
இதுல இந்த தீயசக்தி திருமாவளவன் போன்றவர்கள் நிலையானது என்று சொல்லிருக்காங்க. அதையே தான் உதயநிதி பேசி இருக்காப்ல. நாங்கள் அதை எல்லாம் நிலை இல்லாம பண்ணனும்…. அதுதான் பகுத்தறிவு என தெரிவித்துள்ளார். நான் என் கேள்விக்கு பதில் சொல்லட்டும். தாய் உறவு இருக்கு, நிலையானது. சகோதரி உறவு இருக்கு, நிலையானது. மனைவி உறவு இருக்கு, நிலையானது.
நீ எத ? எதுல மாத்த போறனு சொல்லு… என்ன மானங்கெட்ட கூட்டம் இது? ஆகவே சனாதன தர்மத்தை பற்றி பேசியவர்கள்… நிச்சயமா சுப்ரீம் கோர்ட் முன்னாள் நிறுத்தப்படுவார், தண்டிக்கப்படுவார். இவுங்களுக்கு இருக்குற போலீஸ், கோர்ட்டை வச்சி பிஜேபியை மிரட்ட பாக்குறாங்க, அது நடக்காது என தெரிவித்தார்.