
உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே ரயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்ததாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ரகுராஜ் சிங்க் நிலையம் வரவிருந்த ரயிலை தகவல் கொடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் ரயில் விபத்திலிருந்து தப்பியுள்ளனர். பின்னர் தண்டவாளத்தில் கொட்டி கிடந்த மணல் அகற்றிய பின் ரயில் சேவை தொடங்கியது.
அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும், அதற்கு மணல் கொண்டு வந்த லாரி டிரைவர் சண்டவாளத்தில் மணலை கொட்டி விட்டு சென்றிருக்கலாம் எனவும் ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே மணலை கொட்டி சென்ற டிரைவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருவதோடு தீவிர விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.