ராமராஜன் நடிப்பில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை சாந்தி பிரியா. 54 வயதான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கின்றார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவர் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதனை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார். இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரிதும் பாடுபட்ட ஒரு லட்சிய பெண்ணின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.