
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகின்றது. இதில் போஸ்ட் ஆபீஸில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அமலில் உள்ளது.
இத்திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கி தருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இதன் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7% சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ₹ 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு சுமார் ₹ 12,500 முதலீடு செய்யலாம்.
அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் சில லட்சங்கள் வரை வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதத்திற்கு ₹12,500 முதலீடு செய்யும் பொழுது 7.1% வட்டி விகிதத்தில் சுமார் ₹ 40 லட்சம் வழங்கப்படுகின்றது. ஆகவே 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு தொகை ₹ 22. 5 லட்சமாக இருக்கும். அதே நேரத்தில் முதலீடுக்காண வட்டி ₹ 18.8 லட்சமாக இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்திற்கு வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் வரி சலுகையும் வழங்கப்படுகிறது.