
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கடந்த ஒரு வருட காலமாக காவல் பணிக்கு யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சம்பவத்தன்று ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கியின் உள்ளே சென்று எச்சரிக்கை அலாரத்திற்கான வயர்களை அறுத்துள்ளனர்.
பின்னர் கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து 14.94 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ரெக்கார்டுகளையும் மர்ம கும்பல் எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.