நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பல மடங்கு கூடுதலாகவே உள்ளனர்.

இந்த நிலையில் கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகள் தவிர்த்து எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிய,

SBI YONO, YONO Lite SBI, BHIM SBI Pay செயலி மூலம் அறியலாம்.

0922376666 என்ற எண்ணுக்கு BAL என்று டைப் செய்து அனுப்பினால் இருப்பு தொகை விவரம் எஸ் எம் எஸ் இல் வரும்.

மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம்+91 90226 90226 என்ற எண்ணுக்கு Hi என மெசேஜ் செய்தால் பேலன்ஸ் விவரங்கள் கிடைக்கும்.