
செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நாங்குநேரி போன்ற சம்பவங்கள்… இதுபோன்ற மனநிலை குறிப்பாக அரசுப்பள்ளி – அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில் தான் நடைபெறுகிறது. இன்டர்நேஷனல் பள்ளிகளிலே…. சிபிஎஸ் பள்ளிகளிலோ…. இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. அரசு பள்ளியிலும் – அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது என்று சொன்னால் முழுகாரணமும் ஆசிரியர்கள் என்று முதலில் முடிவு பண்ணணும்.
அப்ப ஆசிரியர்கள் எங்கு தவறு செய்கின்றார்கள் ? பல நேரங்களிலும் ஆசிரியர்களே அந்த மாணவர்களை சாதி ரீதியாக நடத்துவதும், துன்புறுத்துவதும் வகுப்புக்குள்ளேயே SC மாணவர்கள் எல்லாம் எழுந்திரியுங்கள் என்று அவர்களை சிறுமைப்படுத்துவது வகையில், அவர்களை தனிமைப்படுத்துவதும், அவர்களை மன ரீதியாக ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் தான் சில பேருக்கு சாதியை தூண்டுவதும் – சாதியை தாழ்வதும் மனரீதியாக சிக்கலை உருவாக்கும்.
1947ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசியல் சாசனத்தில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி கொடுக்கணும், கல்வி என்பது பொதுவாகிறது. கல்வி கொடுப்பது கட்டாயம் ஆகிறது. அதுவும் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு கட்டாயமாக கல்வி கொடுக்க வேண்டும். அப்படி இருக்கும் போது சாதியோடு… சாதி ரீதியாக பள்ளிகள் எதற்கு ? பள்ளி பெயர்களில் ஜாதி ரீதியிலான பள்ளிகள், மத ரீதியிலான பள்ளிகள் இதை எதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது ? என கேள்வி எழுப்பினார்.