தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தேவியின் வங்கி கணக்கில் இருந்து காரல் மார்க்ஸ் பணம் எடுத்தது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது தேவி உட்பட 4 பேர் காரல் மார்க்ஸை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தேவியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.