மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே செல்லும் வாகனங்களை பரிசோதிக்கும் போது சந்தேகப்படும்படி வந்த டெம்போ ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பிராண்டுகளான குட்கா மற்றும் ரூ 6,32 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன்பின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.