சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு மோதல்களில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஜாபூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள், காங்கர் பகுதியில் 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஒரு போலீஸ் வீரரும் உயிரிழந்துள்ளார்.

பீஜாபூர் மற்றும் தந்தேவாடா மாவட்ட எல்லைப்பகுதியில், காலை 7 மணியளவில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது திடீர் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நக்சல்களிடம் இருந்து அதிகளவில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளை  மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.