நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அன்புமணி ராமதாஸ் தான் அடிக்கல் நாட்டினார் என்று அவர் கூறினார் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இது குறித்த அவர் மேலும் கூறுகையில், திமுக காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்த போது அன்புமணி ராமதாஸ் சுகாசர துறை அமைச்சராக இருந்தார் அப்போது அவர் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

காங்கிரஸ் கட்சி கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை. தற்போது 40 எம்பி களை வைத்துள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் அவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டவில்லை என கூறினார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இப்படி இருக்கும் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அன்புமணி ராமதாஸ் வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் என்று சீமான் உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.