
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 78வது வார்டு… அது பைக்கரா வார்டு… அதுல பம்பிங் ஸ்டேஷனே இல்ல… இந்த ரெண்டரை வருஷத்துல பம்பிங் ஸ்டேஷனை மாநகராட்சி உருவாக்கி இருக்கலாம் இல்ல…. இன்னைக்கு பாத்தீங்கன்னா… மாநகராட்சியில் கீழே இருந்தே மேல வரைக்கும் கரப்சன், கரெக்ஷன் தான். எல்லா வகையிலும்இன்னைக்கு அதுதான் நடக்குது. இன்னைக்கு மேயர் அறிக்கையில் குழு போட்டு இருக்கேன்னு சொல்லுறாங்க… என்ன குழு ? சும்மா கண் தொடைப்பதற்கான குழு.
இதெல்லாம் எப்ப போடணும் ? இன்னைக்கு பாத்தீங்கன்னா… அதிகாரிகள் எல்லாம் மூன்று மாசம், ஆறு மாசத்திற்கு ஒரு தடவை AE எல்லாம் மாத்த போறாங்க… புது AE-க்கு வார்டு பத்தி என்ன தெரியும். அந்த குறைகளை எப்படி கலைவாரு ? AC மாற்றப்படுகிறார். என்ன நிர்வாகம் இந்த ஆட்சியில நடக்கிறது. ஒன்னுமே இல்லை என்பது நான் வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மிக மோசமாக செயல் இழந்து போய் விட்டது. உடனடியாக இந்த பக்கம் புத்துபட்டி வழியாக… அழகப்பா நகர்ல இருந்து வருகின்ற இந்த குப்பை வண்டிகளை நிறுத்தாவிட்டால், நான் மக்களைத் திரட்டி மிக பெரிய போராட்டம்… என் தொகுதி மக்கள் சார்பில் அனைத்து மக்களையும் திரட்டி இங்கு போராட்டம் செய்வேன்.
புத்துப்பட்டி மக்களையும் அழைத்து இங்க உட்கார வைத்து போராட்டம் பண்ணுவேன். பெரிய போராட்டத்தை இந்த அரசாங்கம் சந்திக்க வேண்டி இருக்கும். மாநகராட்சி சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். போர்க்கால அடிப்படையில இப்பயாவது விழித்துக் கொண்டு…. வைகை ஆற்றில் நிறைந்திருக்கின்ற ஆகாயதாமரையை உடனடியாக அகற்ற வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.