உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் எம்எல்ஏ சரிதா படோரியா கலந்து கொண்டார்.

அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் திடீரென எம்எல்ஏ தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டனர். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.