டெல்லி சாணக்புரியில் உள்ள குடியிருப்பில் இந்திய வெளிநாட்டு சேவையின் மூத்த அதிகாரியான ஜிதேந்திர ராவத் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள குடியிருப்பின், முதல் மாடியில் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் டேராடூனில் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது குடியிருப்பு கட்டிடத்தின்  மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே ராவத் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 7, 2025 அன்று வெளிநாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சகம் செய்து வருகிறது. டெல்லி காவல்துறையினருடன் நெருக்கமாக தொடர்பில் இருக்கிறோம். மேலும் குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளது.