
ஆம்பூர் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியை காணவில்லை என கணவர் பரபரப்பு புகாரை கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தலைவருக்கான பதவியை ஏற்க முடியாமல்… கிராமத்திற்குள் செல்ல முடியாமல்…. வெளியே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார் இந்துமதி பாண்டியன்.
இந்துமதி என்பவர் கடந்த 9ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என்று அவரது கணவர் பாண்டியன் தற்போது ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும், அதனால் நாங்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை இருந்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் அறிவிக்கப்பட்டார். மாற்று சாதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவர் பதவி ஏற்க முடியாத சூழலிலே வசித்து வந்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து தடுத்தல் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.