
பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் கப நாடுவானில் பகுதியில் வசித்து வந்தவர் வெலோஸா. இவருக்கு 17 வயதிலேயே திருமணம் முடிந்து உள்ளது. தனது கணவரிடம் இருந்து திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே வெலோஸா பிரிந்து வாழ்ந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். ஆனால் அங்கு பாலியல் வன்கொடுமையில் சிக்கியதால் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அந்த நிலையில்தான் உறவினர் ஒருவர் மூலம் கடந்த 2010 இல் இந்தோனேசியாவுக்கு பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்த முதலாளியின் நண்பர்கள் துணியை பிலிப்பைன்ஸ்க்கு எடுத்து வந்தபோது அதில் போதை பொருள் இருந்ததால் இந்தோனேஷியாவின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு துப்பாக்கி படையினரினால் மரண தண்டனை வெலோஸாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்தோனேஷியாவின் அதிபராக இருந்த பெனிக்னோவால் இவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் வெலோஸா தனது சொந்த ஊரான பிலிப்பைன்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
14 வருடங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு வெலோஸா திரும்பி உள்ளார். ஆனால் இங்கும் அவர் குற்றவாளியாகவே அனுப்பப்பட்டிருப்பதால் பெண்களுக்கான மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெலோஸா கூறியதாவது 15 ஆண்டுகள் எனது குழந்தைகளையும், பெற்றோர்களையும் பிரிந்து வாழ்ந்து விட்டேன். இனியாவது அவர்களுடன் நெருக்கமாக வாழ எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.