சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் 417 நாட்களுக்கு பிறகுநாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகும் நிலையில் அவரை வரவேற்க ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பு குழப்பம் இருப்பதாக சென்னை அமர்வு நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.

பிணை உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்திய நிலையில் விசாரணை அதிகாரி முன்பாக எப்படி தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இதனால் செந்தில் பாலாஜி இன்று சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் செயல்படுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் இதனால் தற்போது சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வருவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.