
செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சர் இல்லை. அவர் இப்பவும் அமைச்சராக தான் இருக்கிறார். திரு.செந்தில் பாலாஜி அவர்கள் உடைய உடல்நிலை அடிக்கடி மோசமாகி கொண்டிருப்பது ஒரு மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்குமே வருத்தமாக தான் இருக்கு. ஒருவேளை சிறைத்துறை சரியாக அவரை கவனிக்கலையா ? தமிழ்நாடு அரசுக்கு கீழே தான் அவர் இருக்காரு… ஒரு அமைச்சருக்கு கூட சரியான உணவோ இல்ல ஒரு சரியான மருத்துவ வசதி இல்லை என்கிறது தான் அவருக்கு திருப்பி திருப்பி உடல்நிலை சரியா இல்லை என்பது எங்களுக்கு வரக்கூடிய செய்திகளை வச்சு பார்க்கிறோம்.
அதனால ஒருவேளை தமிழக அரசு அவருக்கு சிறந்த மருத்துவத்தையோ, அவருடைய உடல் நிலையை கவனிக்க முடியாவிட்டால் அவர்கள் மத்திய அரசாங்கத்தினுடைய உதவியை கூட நாடலாம். எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரியான மருத்துவமனைகளில் கூட அவரை அனுப்பி வைத்து டிரீட்மென்ட் கொடுக்கலாம். அதனால் மாநில அரசு அதையும் யோசிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் சமூக நீதி பேசுற அரசாங்கம்… தூய்மை பணியாளர்கள்…. அவர்கள் வீட்டிலே யாராவது ஒருவர் இறந்து விட்டால், அந்த குடும்பத்தில் இருக்கின்ற இன்னொருவருக்கு அந்த வேலையை கொடுக்க வேண்டும்… இது அரசாங்கத்தின் விதி. இப்போ என்ன நடக்குதுன்னா…. யார் தூய்மை பணியாளர் இறந்தாலும் அந்த இடத்துக்கு ஒரு கான்டாக்ட் லேபர் வச்சு வேலை பண்றது. மேக்சிமம் வொர்க் எல்லாம் காண்ட்ராக்ட் லேபரா மாத்துறது மூலமாக…..
நீங்க அரசாங்க ஊழியர் அப்படிங்கற ஒரு நிலை, தூய்மை பணியாளர்கள்ல கிட்டத்தட்ட குரூப் டி பொசிஷன்ல இல்லாம போயிட்டு இருக்கு… சமூகத்திலே பின்தங்கி இருப்பவர்களை கை தூக்கி விடுவதற்காக…. அரசு ஊழியர் அப்படிங்கற ஒரு மிகப்பெரிய அந்தஸ்து…. அதை இந்த அரசாங்கம் குரூப் டி ஊழியர்களுக்கு பறித்துக் கொண்டிருக்கிறது… மிகப்பெரிய சமூக அநீதி தூய்மை பணியாளர்கள் விஷயத்துல இந்த அரசாங்கம் பண்ணிட்டு இருக்கு.
ஒரு பக்கம் குப்பைகளை எடுக்காமல் விடுகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் காண்ட்ராக்ட்ல விட்டுட்டு பணியாளர்களை குறைத்து குறைத்து குறைச்சி அவங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலை கொடுக்கிறது…. அந்த குறைந்த ஊதியம் கான்ட்ராக்ட் காரங்க ஒழுங்கா குடுக்குறாங்களா அதுவும் இல்ல…. கோவை மாநகராட்சியிலே ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர் விஷயத்துல பாரதிய ஜனதா கட்சி தனியா ஒரு போராட்டம் நடத்துவதற்கு கூட திட்டமிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.