போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நேர்முகத் தேர்வில் அனைவருக்கும் மதிப்பெண்கள் பென்சிலில் எழுதப்பட்டதாகவும்,  பின்னர் பணம் கொடுத்தவருக்கு மட்டும் பேனாவில் திருத்தம் செய்யப்பட்டு பணி வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது அமைச்சருக்கு எதிரான முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.