திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே வந்த 3 பேர் வெங்கடேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 2000 பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் அருகில் உள்ள நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழிப்பறி செய்த நபர்களை உதவி கமிஷனர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28), காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த பாலாஜி சரவணன்(28), திருமுருகன்பூண்டியை சேர்ந்த ராம்குமார்((28) ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் தொடர்ந்து ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் செல்லும் பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன், நகை போன்றவற்றை வழிப்பறி செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.