
சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான அட்டகாசங்களை செய்து வருகின்றனர். இவர்கள் “ரூட் தல” என்ற பெயரில் ரயிலின் மேற்கூறையில் ஏறி நிற்பது, ஜன்னல் கம்பிகளில் தொங்குவது போன்ற அட்டகாசங்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் அதனை இணையதளத்திலும் பயமில்லாமல் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் துளியும் பயமில்லாமல் ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவர்கள் ரயிலின் ஜன்னலில் தொங்கிக்கொண்டு கல்லூரி வரை பயணம் செய்கின்றனர். அதோடு கானா பாடல்களை பாடி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களின் இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.