திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  DMK மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்பி எழிலரசன், என்ன காரணத்திற்காக நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று தெள்ளத் தெளிவாக இங்கே உரையாற்றியவர்கள் சொன்னதில்…   கூடுதலாய் ஒரு செய்தியை மட்டும் சொல்லிட வேண்டும் என்று சொன்னால்,  தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் மூலமாக….. அந்த துறையின் கீழ் இருக்கக்கூடிய தேர்வகத்தின் சார்பில் நடத்தபடுகின்ற + 2  தேர்வில் மாணவர்கள் பெறக்கூடிய இயற்பியல்,

வேதியல், தாவரவியல் அல்லது உயிரியல் என்ற அடிப்படையில் பெறக்கூடிய மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவ கல்வி படிப்பதற்கு நுழைவு தேர்வு இல்லாமல், மதிப்பெண் அடிப்படையில் சேரலாம் என்ற ஒரு சட்டத்தினை மிகச் சரியாக கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்கள். முதலமைச்சராக இருக்கும் போது கொண்டு வந்த அந்த நல்ல திட்டங்களை சிதைக்க கூடிய வகையில் கொண்டு வரப்பட்டு இருக்கின்ற இந்த நீட் தேர்வை எதிர்த்து நின்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே அனிதாவினுடைய அண்ணனாக இருக்கக்கூடிய  மணிரத்தினம் பேசும் பொழுது சொன்னதும்…… தந்தையாக இருந்து அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் சொன்னதும் இங்கே  கோடிட்ட பார்க்கும்பொழுது பிளஸ் 2 மார்க் அடிப்படையில் எனக்கு இது கிடைக்கும்,  கிடைக்காது என்று முடிவெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப்பெண் பெற்றால் கண்டிப்பாக மெடிசன் படிக்க முடியும் அப்படின்னு தெரிந்தது. 1200க்கு 1000க்கு உள்ளே தான் நான் மதிப்பெண் எடுப்பேன் என்றால் அடுத்த ஆப்ஷனுக்கு போய் விடுவேன் என்று முடிவு  எடுக்க முடிஞ்சுது.

இந்த ஆப்ஷனை அன்னைக்கே முடிவு எடுத்து விடுகிறார்கள்.  பிளஸ் டூ மார்க் எடுத்த உடனே தெரியும். எனக்கு இந்த மார்க் கிடைக்கும்,  கிடைக்காது என அடுத்த கட்டத்திற்கு போய்விடலாம். என்னுடைய முடிவு…. நான் என்ன உழைத்தேன், நான் என்ன படித்தேனோ அதற்கு எனக்கு படிக்கக்கூடிய வாய்ப்பு என்னவோ ஒவ்வொரு மாணவனும் முடிவெடுக்கக்கூடிய உரிமை இருக்கிறது, வாய்ப்பு இருக்கிறது. எந்த உளைச்சலுக்கும் ஆளாக படாமல்…. மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையை…. தங்களுடைய கல்வியை மேல்படிப்பை…. உயர்கல்வியை முடிவெடுக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததை சிதைக்கக்கூடிய வகையில் உருவாக்கி இருக்கக்கூடிய இந்த தேர்வு……  தகுதியின் அடிப்படையில் என்று சொல்லப்பட்டிருக்க கூடிய தேர்வு….  தகுதியற்ற தேர்வு.

இது தரமற்ற தேர்வு. இந்த தேர்வு சமூக நீதிக்கு  எதிரான தேர்வு…. சமத்துவத்திற்கு எதிரான தேர்வு…. சம வாய்ப்புக்கு எதிரான தேர்வு… ஏழை – எளிய பிற்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மக்களுக்கு, மாணவர்களுக்கு எதிரான தேர்வு…. மொத்தத்தில் மாநில  கல்வி உரிமைக்கு எதிரான தேர்வு… அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கக்கூடிய மாநில கல்வி உரிமை பறிக்கக்கூடிய ஒரு தேர்வு….  எனவே ஒட்டுமொத்தமாய் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் குடியாற்றி முறைக்கும் எதிரான தேர்வு என்ற காரணத்தினால் தான் இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தை கடந்து வந்திருக்கக்கூடிய அத்தனை பேரின்  முழக்கம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி சாலையில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார். மாநில உரிமை வேண்டும்… கல்வி உரிமை வேண்டும்… நிதி உரிமை வேண்டும்…. அதனை உரிமைகளும் எங்களுக்கு தாருங்கள் என்று முழக்கமிட்டும் பொழுது,  அன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்,  சாலையில் நின்று உரக்க குரல் எழுப்பிக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்கு…. நாடாளுமன்றத்திலும்,  சட்டமன்றத்திலும் என்ன நடக்கிறது என்று தெரியாது என்று சொன்னார்கள் ?

அண்ணா சொன்னார்….  நாங்கள் கொட்டி கிடக்கின்ற செங்கல்,  நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் என்றார்….   கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் ஒரு செங்கலை உருவினாள் மொத்தமாக விழுந்து விடும். ஏற்கனவே பாசிச பாஜக அரசு கட்டி இருக்க கூடிய கோபுரத்தில் ஒரு செங்கலை எங்களுடைய இளம் தலைவர் அவர்கள் உருவி விட்டார். மிகச் சரியாக சரிந்து கொண்டு இருக்கின்றது. 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த பாசிச பாஜக அரசனுடைய கோபுரம் சரிந்து விழ போகிறது என்பதில் மாறுபட்ட கருத்து அல்ல.

அப்பொழுது நடைபெறக்கூடிய ஒரு மாற்றம்.. நமக்கு இந்த மாற்றத்தை தர இருக்கிறது இந்த இயக்கத்தை தொடங்கி வைப்பதற்கான ஒரு அறிக்கையாக…. கடிதமாக…. நம்முடைய இளம் தலைவர் அவர்கள் எழுதி வழங்கி இருக்கக்கூடியதில் இரண்டு வரிகளை சொல்லி இருக்கிறார். நமக்கு ஐம்பது நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெற இருக்கின்றோம்..  தமிழ்நாட்டில் மாணவர்களிடம்….   பெற்றோர்களிடம்…. கல்வியாளர்களிடம்…. சமூக செயல்பாட்டாளர்களிடம்…. ஒட்டு மொத்தமாக மருத்துவர்களிடம் என அத்தனை பேரிடமும் பெற இருக்கிறோம் என்று சொன்னார் என தெரிவித்தார்.