தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன கலைஞராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் திருச்சிற்றம்பலம் படத்தில் வெளியாகியுள்ள “மேகம் கருக்குதா” பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் தேசிய விருது வென்றார். மேலும் வாரிசு படத்தில் “ரஞ்சிதமே” பாடலுக்கு நடன கலைஞராகவும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” படத்திற்கு நடனம் அமைத்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் ஜானி மாஸ்டர் ஆந்திர மாநிலம் பிரபல பெண் திரைப்படக் கலைஞரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வருகின்றனர். இச்செய்தி
குறித்து அறிந்த நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஜானி மாஸ்டரை தன் கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் திரையுலகில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.