கேரளா மாநிலத்தில் மலையாள நடிகர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரளாவின் சலசித்ரா அகாடமியின் தலைவரான ரஞ்சித் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, அதே சூழலில் மாநில பொது செயலாளர் சித்திக் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகையும் மாடலுமான ரேவதி, கேரளா அம்மா நட்சத்திர அமைப்பின் பொதுச் செயலாளரான நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகை ரேவதி 2019 ஆம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக சித்திக் மற்றும் கேபிஏசி லலிதா செய்தியாளர்களை சந்தித்து பேசிய காணொளியை மீண்டும் பகிர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகர் சித்திக் மீதான குற்றச்சாட்டுகளை குறித்து ரேவதி ” நடிகை சித்திக் தனது மகனுடன் தமிழ் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அதைப் பற்றி என்னிடம் அவர் பேசினார். சித்திக் நடிப்பில் வெளிவந்த “சுகமாரியாதே” படத்தின் முன்னோட்டம் நடைபெற்றது. அது முடிந்த பிறகு என்னை திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலுக்கு வர சொன்னார்கள். எனவே நான் அங்கு சென்றேன் அப்போது சித்திக் என்னிடம் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என்று கேட்டார்.

அப்போது எனக்கு 21 வயது என்பதால் இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. இதனால் அவரிடம் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அப்போது அவர் நீண்ட நகங்களைக் கொண்ட பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். என்னை ஒரு மணி நேரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த விஷயத்தை பற்றி வெளியில் சொன்னால் எனக்கு இந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தை பற்றி என்னுடைய குடும்பத்தாரிடம் சொன்னேன், அவர்கள் எனக்கு ஆதரவாக நின்றார்கள். சித்தத்துக்கு ஒரு மகள் இருக்கிறார் அவருக்கும் இதே போன்ற சம்பவம் ஏற்பட்டால் சும்மா இருப்பாரா? திரை உலகில் இப்படி முகமூடி அணிந்து தெரியும் நபர்களை பற்றி நினைக்கும் போது நான் வெட்கப்படுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து நடிகர் சித்திக் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் வழுவு பெற்றதையடுத்து, அவர் மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் சித்திக் அவரது ராஜினாமா கடிதத்தை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான மோகன்லாலிடம் சமர்ப்பித்துள்ளார்.