
ஆந்திராவின் முதல் மந்திரியாக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். ஆனால் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019ம் வருடம் முதல் மந்திரியாக இருந்தார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ராஜசேகர ரெட்டியின் மகளான ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் என்ற தனிக்கட்சி நடத்தி வந்தார். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்துள்ளார்.
இப்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெகன் மோகன், தனது தங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் எனக்கும் எனது மனைவிக்கும் சொந்தமான பங்கை, பிற்காலத்தில் தான் எனது தங்கைக்கு செட்டில்மெண்ட் செய்து விடுவதாக கடந்த 2019ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
இந்த ஒப்பந்தம் முற்றிலும் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாக செய்து கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது அதனை ரத்து செய்ய விரும்புவதாக ஷர்மிளாவுக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்தேன். ஆனால் எங்களுக்கு சொந்தமான பங்குகள் ஷர்மிளாவின் பெயருக்கு வாரிய தீர்மானம் மூலம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான கிளாசிக் ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளும் என் தாயார் பேருக்கு மாற்றப்பட்டுள்ளது.
அவர் எனக்கு அரசியல் ரீதியாக எதிரியாக செயல்பட்டு வருவதுடன் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள் சகோதர, சகோதரிக்கு இடையே நான் உறவுகளை சீர்குலைந்து விட்டது. இனிமேல் அவர் மீது எனக்கு பாசம் இல்லை, நான் புரியுதுணர்வு ஒப்பந்தத்தில் கூறியபடி ஷர்மிளா பெயருக்கு பங்குகளை மாற்ற நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.