
விஸ்கான்சின் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் டெய்லர் ஷபிசினஸ், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது தனது வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் கேள்வி பதில்களுக்கிடையில், திடீரென வழக்கறிஞரின் மீது குதித்து, கத்தியதுடன் அவரை தாக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் சென்று அவரை தடுக்க, நீதிமன்றம் பரபரப்பாக மாறியது. இந்த விசாரணை, டெய்லர் ஷபிசினஸ் ஒரு சிறை காவலரை தாக்கியதாக புதிய குற்றச்சாட்டு வழக்கில் நடைபெற்றது.
JUST IN: Woman who was convicted of chopping up her boyfriend, ‘finds out’ after trying to attack her defense attorney in the courtroom.
This is the second time that 27-year-old Taylor Schabusiness has attacked her defense attorney.
Back in 2023, she was caught on camera… pic.twitter.com/VphXhbaOkS
— Collin Rugg (@CollinRugg) April 4, 2025
இந்த விசாரணை, டெய்லர் ஷபிசினஸ் ஒரு சிறை காவலரை தாக்கியதாக புதிய குற்றச்சாட்டு வழக்கில் நடைபெற்றது. கடந்த மாதம், அவர் வழக்குக்கு எதிரொலியாகக் கையாளக்கூடிய நபரே என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2023ம் ஆண்டு, ஷபிசினஸ் போதை பொருள் உட்கொண்ட நிலையில், தன் காதலன் ஷாட் தைரியனைக் கழுத்தை இறுக்கி கொன்றதுடன், அவரது உடலை துண்டித்து, தலையை ஒரு வாளியில் வைத்திருந்த கொடூரச் செயலுக்காக தண்டிக்கப்பட்டவர்.
தற்போது எழுப்பப்பட்ட புதிய குற்றச்சாட்டுக்கு அவர் குற்றம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். அவரது நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, விசாரணை இனி Zoom வழியாக தொடரப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.