
2023 ஆம் ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் டெங்குவால் 209, 000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையை சேர்ந்த ராஜ் பாலாஜி (13) என்ற மாணவன் இன்று காலை உயிரிழந்த நிலையில், தற்போது திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி (10) டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழகத்தில் டெங்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.