சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பெயரில் 4 பிரிவுகளின் கீழ் அந்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கல்லூரியில் நடத்திய விசாரணையில் அந்த மாணவர் கல்லூரி உள்ளேயே இதுபோன்று பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. தற்போது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த மாணவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும்  காவல்துறையினர் தலைமறைவான மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.