தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் விசாரணையில் இருந்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் பொறுப்பு கூடுதல் பொறுப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோதே மதுக்கடைகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10  ரூபாய் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது அதே குற்றச்சாட்டு மீண்டும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தமிழக அரசியலில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.