
தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2025-26 ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை உயர்த்த தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாக துறை அனுமதி கேட்டுள்ளதாம்.
அதன்படி சொத்து வரி 6 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை சொத்து வரி உயர்த்தப்பட்டால் தமிழகத்தில் வீட்டின் வாடகையை உரிமையாளர்கள் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மேலும் அது மட்டுமின்றி வணிகர்களும் தங்கள் பொருட்களுக்கான விலைகளையும் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.