
இந்தியாவில் ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் சர்வதேச எண்களின் மூலம் அழைப்புகள் விடுத்து அதிக கட்டணம் வசூலிப்பது. இதுகுறித்து ஜியோ நிறுவனம் பயனர்கள் அனைவரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்த விழிப்புணர்வு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, பயனர்கள் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை திருப்பி அழைக்க வேண்டாம். தெரியாமல் சர்வதேச எண்களை மீண்டும் அழைத்தால் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 200 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் மிகவும் சுருக்கமான அழைப்புகளை தொடங்குவார்கள் பயனர்கள் பதிலளிக்கவும் கால் துண்டிக்கப்பட்டுவிடும்.
உடனே மீண்டும் பயனர்கள் அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். முன்பின் அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து மிஸ்டு கால் மூலம் அழைப்புகள் வந்தால் அதனை திரும்ப முயற்சிக்காமல் விட்டுவிட வேண்டும். பயனர்கள் தங்கள் ஃபோன்களை இன்டர்நேஷனல் calls blocking ஐ enable செய்யுமாறு ஜியோ நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த மோசடிகள் பற்றி வயதானவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மொபைல் சேவையை தொடர்பு கொள்ளவும்.