மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷரீக் குரேஷி (33). இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குரேஷியின் 24 வயதான மனைவி தனது கணவரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச நிலை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இதனை அடுத்து தனது கணவரின் மீது பச்சபோலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில்  தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் காயப்படுத்தியதாக புகார் அளித்தார். ஆனால் கணவன், மனைவி வாக்குவாதங்களுக்கு எல்லாம் கைது செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது கணவரை சட்டபூர்வமாக கைது செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி  அவரது whatsapp கணக்கை ஹேக் செய்து ஆதாரத்தை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருடைய செல்போனில் ஆபாசமான விடீயோக்கள் இருந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட 19 வயதான பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மட்டும் அந்த பெண்ணின் கணவர் மீது  புகார் அளிக்க முன் வந்தார்.

அந்த 19 வயது  இளம் பெண்ணை சாகில் ஷர்மா என பொய் பெயரில் குரேஷி  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்தப் பெண்ணின்  தங்க மோதிரத்தை ரூபாய் 30000க்கு  விற்று அந்த பணத்தையும் பறித்துள்ளார்.

இதனை அடுத்து குரேஷி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது செல்போனை மீட்டு ஆய்வு செய்ததில்  இது போன்று பல மாணவிகளை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாக்பூர் பச்சபோலி காவல்துறையினர் குரேஷியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.