
கடந்த சில நாட்களுக்கும் முன்பு ஒரு பெண் பலபொருள் அங்காடிக்குள் சென்று பொருள்களை எடுத்துள்ளார். அதனை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் இதனை கடையின் உரிமையாளர் அந்தக் கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்துள்ளார். பின்பு உரிமையாளர், அந்த பெண்ணிடம் சென்று கோபப்படாமல் எச்சரிக்கை விடுத்து, திருடிய பொருட்களை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண்ணின் முகத்தை மறைத்தும், தன் பொருள்களை திரும்ப தர வேண்டும் என்பதற்காக மட்டுமே வீடியோ வெளியிட்டதாக தெரிவித்தார். இவ்வாறு தண்டனைக்கு பதிலாக மன்னிப்பு மற்றும் புரிய வைத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Lauta do😭 pic.twitter.com/pPCZiDm8ge
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 19, 2024