
பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா. கிருஷ்ணன், இங்கு இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள் அனைவரும் இன்றைக்கு ஏற்றுக் கொள்வோம். உங்களைத்தான் தலைவனாக…. குடும்ப தலைவனாக….. நாட்டின் தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். எனவே இன்றைக்கு கூடி இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர் கூட்டத்திலே ஒரு முடிவு எடுப்போம்.
என்ன முடிவு தெரியுமா ? அஞ்சாத சிங்கமாக, எவருக்கும் அஞ்சாமல், நடை போடுவோம். எந்த சூழலிலே எப்படி, எவரை வீழ்த்துவோம் என்ற வியூகம் உங்களுக்கு தெரியும். நீங்கள் யாரோடு கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் வெல்வது தமிழ் இனமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கு வேண்டி அங்கீகாரத்தை இந்த மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய பொறுப்பாளர்கள் என்கின்ற முறையிலே நாங்கள் பொறுப்பேற்று சொல்லுகின்றோம்.
நீங்களும், அண்ணன் வைத்தியலிங்கம் அவர்களும் எந்த முடிவு எடுத்து அறிவித்தாலும்…. நாங்கள் மனதார ஏற்றுக்கொள்வோம், ஏற்றுக் கொள்வோம்…. நீங்கள் காட்டியதே கனி. வில் எங்கள் கையில் இருக்கிறது. அம்பு இருக்கிறது. காட்டுங்கள் கொய்து கொண்டு வந்து, உங்கள் காலடியில் வைக்கின்றோம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.