
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் சில படங்களில் பின்னணி பாடகர் ஆகவும் பாடியுள்ளார். ஏழாம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடித்த “சலார்” திரைப்படம் வெளியானது. ஆனால் சலார் திரைப்படம் பெருமளவு எதிர்பார்ப்பை பெறவில்லை. இதனை அடுத்த பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் தனது ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் அவர் கூறியதாவது, “காதல் ஒரு புனிதமான ஒன்று எனக்கு காதல் மீது நம்பிக்கை அதிகம் உண்டு. நான் எப்போதும் என்னை யாரிடமாவது இணைத்துக் கொள்வேன். ஆனால் என் வாழ்க்கையில் இவர்தான் ஸ்பெஷல் என்று சொல்லும் அளவிற்கு இதுவரை யாரையும் பார்த்தது இல்லை. காதல் தோல்வி என்பது மற்றவரை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ரிலேஷன்ஷிப்பில் உள்ள பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு நாம்தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.