சியோமி நிறுவனத்தின் சியோமி 13 சீரிஸில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே கன்சோல் தளத்தில் சிஇ என்னும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. சியோமி 13 லைட் அம்சங்கள் சியோமி சிவி 2 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புது சியோமி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.