தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தல தளபதிக்கு அடுத்தது சிவகார்த்திகேயன் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட இந்த இருவரும்  சினிமாவிற்கு அப்பால் மிகவும் பிசியாக இருப்பதால், சிவகார்த்திகேயன், இந்த இருவருக்கும் அடுத்ததாக தான் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

விஜய் தனது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மற்றும் அஜித் கார் பந்தயத்தில் மீண்டும் களமிறங்கி உள்ளதால் இவர்களின் படங்கள் குறைய வாய்ப்புள்ளது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சிவகார்த்திகேயன்‌ சமூக வலைதளங்களில் “ஒரே தளபதி, ஒரே தல தான், அடுத்த தளபதி அப்படியெல்லாம் இல்லை, அவங்கள மாதிரி படம் நடிக்கனும், ஹிட் கொடுக்கனும்னு நினைக்கலாம், அவங்களாகவே ஆகனும்னு நினைக்ககூடாது” என்று தெளிவாக கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.